SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

2/22/2019 4:53:23 AM

நாகை, பிப். 22: வரும் அதிமுக அம்மா பேரவையின் நாகை மண்டல நிர்வாகிகள் ஆலாசனைக் கூட்டம்  நாகையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலை வகித்தார்.  மாவட்ட அம்மா பேரவை  செயலாளர் பாரதி எம்எல்ஏ வரவேற்றார். கூட்டத்திற்கு அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான உதயக்குமார் தலைமை வகித்து
சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜிவானந்தம், ஜெயபால், நாகை எம்.பி. கோபால்,  எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், நாகை நகர செயலாளர் தங்ககதிரவன் மற்றும் மாநில, மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஏராமளமானோ கலந்து கொண்டனர்.   கூட்டத்தில்,  காவிரி டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்களை துரிதமாக மேற்கொண்ட முதலமைச்சர் தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது. கஜா புயலின்போது  அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களத்தில் இறக்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டும் உடனே மின்சார வசதியை ஏற்படுத்தியும் நிவாரண தொகை வழங்கியும், 27 பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்கியும்,  வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற செய்ய ஓய்வு, உறக்கம் இல்லாமல் பணியாற்றிடுவது  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்