SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது

2/22/2019 4:52:20 AM

கரூர், பிப். 22: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2019ன் தொடர்ச்சியாக ஜனவரி 31ம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் குறிப்பாக 1.1.2019ம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்ட தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபட்டு இருப்பின் விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்திடவும், தங்கள் பெயர் சேர்க்கப்பட்ட விபரங்களை அறிந்து கொள்ளவும் வசதியாக சிறப்பு முகாம் நாளை(23ம் தேதி) மற்றும் 24ம் தேதி ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது.இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ள நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக படிவங்கள் பெறவுள்ளனர்.எனவே பொதுமக்கள் பிப்ரவரி 23, 24 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனுக்கள் அளித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்