SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

சுற்று சுவரின்றி பாதுகாப்பில்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

2/22/2019 4:52:04 AM

கரூர், பிப். 22:  கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ஜீவா நகர்ப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தொட்டியில் இருந்து அசோக்நகர், ஜீவா நகர், பூங்கா நகர், என்ஜிஓ நகர் போன்ற பல்வேறு நகர்ப்பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பிரதான ஜீவா நகர்ச்சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ளது. ஆனால் பாதுகாப்பு வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இந்த தொட்டியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இங்கு வந்து கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதால் புகை மாசு காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே இதுபோன்ற செயல்கள் நடக்காத வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்