SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகராட்சி அலுவலகத்தில் மக்கள் திரண்டதால் பரபரப்பு

2/22/2019 4:51:53 AM

கரூர், பிப். 22: கரூர் நகராட்சி அலுவலகத்தில் அரசின் சிறப்பு நிதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெற பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சட்டமன்ற தொடரின்போது ஏழை எளியவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் இந்த நிதியை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பயனாளிகள் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிறப்பு நிதி பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்வதற்காக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வரும் 24ம் தேதி முதல் இந்த நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளதால் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்