SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலைப்பட்டி பள்ளிக்கு கிராம மக்கள் கல்வி சீர்வரிசை வழங்கல்

2/22/2019 4:51:37 AM

தோகைமலை, பிப். 22: தோகைமலை அருகே முதலைப்பட்டி அரசு நடுநிலை பள்ளிக்கு கிராம மக்கள் சார்பாக கல்வி சீர்வரிசை ெபாருட்கள் கொண்டு வந்தனர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே முதலைபட்டி ஊராட்சி முதலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தின் கடைக்கோடி ஊராட்சியாக முதலைப்பட்டி ஊராட்சி இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களுக்கு தொடக்கக்கல்வியின் தேவை எட்டாக்கனியாக இருந்ததால் தங்கள் பகுதியில் அரசு பள்ளி அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தொடக்கப்பள்ளியாக துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.ஆனால் இப்பகுதி பொதுமக்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி வளர வேண்டும் என்றும், மாணவ மாணவியர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை காட்டிலும் தங்களது குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கவில்லையே என்று உணராத வகையில் பொருட்களை வழங்கி தரமான கல்வி பயில செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிக்கு கல்விசீராக பல்வேறு பொருட்களை அளித்து மாணவ, மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊக்கம் அளித்து வருகின்றனர். இதேபோல் இந்த ஆண்டும் முதலைப்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாக கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சேர், டேபிள், எழுதுபொருட்கள், புத்தகங்கள், நோட்டுகள், மின்விசிறிகள், பிரிண்டர்மிஷின் போன்ற சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு பொருட்களை தாரைதப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அரசு நடுநிலை பள்ளிக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் தோகைமலை வட்டார கல்வி அலுவலர் மீனா, தலைமை ஆசிரியை இசபெல்லாராணி, ஆசிரியர் பரிமணம், கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் மணிகண்டன், பள்ளி முன்னேற்ற தலைவர் கலையரசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சுதா, பிடிஏ தலைவர் வீரமலை உள்பட பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்