SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூர் உள்பட 7 தொகுதியில் போட்டி உழவர் உழைப்பாளர் கழக தலைவர் தகவல்

2/22/2019 4:51:28 AM

கரூர், பிப். 22: வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் உள்பட 7 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக கரூரில் உழவர் உழைப்பாளர் கழக தலைவர் தெரிவித்தார்.கரூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.இதில் நிறுவனத் தலைவர் ஜோதிகுமார் கலந்து கொண்டு பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக சில கட்சிகள் எங்களை அழைத்தனர். நாங்கள் செல்லவில்லை. எங்கள் கட்சியின் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதி உட்பட 7 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம். போட்டியிடும் 7 தொகுதிகளிலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.பின்னர் அவர் அளித்த பேட்டி:வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம், வேலூர், கரூர், திருப்பூர், புதுச்சேரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய 7 தொகுதிகளில் தனித்து போட்டியிடும். அதற்கு முன்பாக கரூரில் மார்ச் 24ம் தேதி அன்று விழிப்புணர்வு மாநாடு நடத்துகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை வாய்ச்சொல் மட்டுமே உள்ளது. செயலில்
இல்லை என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்