SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோகைமலை அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் எச்சரிக்கை

2/22/2019 4:50:39 AM

தோகைமலை, பிப். 22: உயர்நீதி மன்றம் உத்தரவையடுத்து கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆணையர்(கிராம வளர்ச்சிகள்) ராணி முன்னிலை வகித்தார். இதில்ஒவ்வொரு டிஜிட்டல் பேனர் மற்றும் தட்டிகளுக்கு இடையே 10 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலைமுனைகள், தெருவின் சந்திப்புகள் ஆகியவற்றில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், சிலைகள், சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. அவ்வாறு யாரேனும் சட்டத்திற்கு புரம்பாக பேனர்கள் வைத்தால் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கலாம். விதிகளை மீறும் நபர்கள் அல்லது விதிமுறைகளை செயல்படுத்தும் அலுவலர்களை தடுக்கும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறைதண்டனை அல்லது இரண்டும் சேர்த்து
தண்டிக்கப்படுவார்கள்.

முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு விளம்பரம் மற்றும் தகவல் அடங்கிய டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள் வைக்க கூடாது. முன் அனுமதி 6 நாட்களுக்கு மிகாமல் இருக்க  வேண்டும். அனுமதி பெற்ற பேனர்களில் அனுமதி எண், நாள், அனுமதி முடியும் தேதி, அளவு ஆகியவற்றை பேனரின் அடிபாகத்தில் குறிப்பிட வேண்டும். அனுமதி வழங்கப்படாத டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டால் அதனை அச்சிட்ட அச்சக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை சார்நிலை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் தவறும் சார்நிலை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அதிமுக சார்பில் மாரியப்பன், திமுக சார்பில் பிரசாத், தேமுதிக  சக்திவேல், பிஜேபி செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்