SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலித்த வாலிபருக்கு சரமாரியாக அடி

2/22/2019 1:37:54 AM

தேனி, பிப். 22: தேனி அருகே உப்புக்கோட்டை கிராமத்தில் குடியிருப்பவர் அறிவழகன்(47). இதே கிராமத்தில் குடியிருப்பவர் சதீஸ் மகன் நெப்போலியன்(24). அறிவழகன் மகளும், நெப்போலியனும் பொள்ளாச்சியில் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது காதலித்ததாக கூறப்படுகிறது.  இதற்கு அறிவழகன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நெப்போலியன் நேற்று முன்தினம் இரவு அறிவழகன் வீட்டு வழியாக நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த அறிவழகன், அவரது மகன் இனியவன், சகோதரர் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து வாலிபர் நெப்போலியனை சரமாரியாகத் தாக்கினர். இதில் காயமடைந்த நெப்போலியன் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் அறிவழகன், இனியவன், ஈஸ்வரன் ஆகியோர் மீது  வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அறிவழகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்