SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று முதல் கம்பம் மெட்டு ரோட்டில் வாகனங்கள் செல்ல திடீர் தடை

2/22/2019 1:37:28 AM

கம்பம், பிப். 22:  கம்பம் மெட்டு ரோட்டில் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்த நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 2.55 கோடி செலவில் புதிய ரோடு போடுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். கம்பம் மெட்டு, நெடுங்கண்டம், கட்டப்பனை, இடுக்கி போன்ற முக்கிய கேரளப்பகுதிகளுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களும், தினந்தோறும் கூலித்தொழிலாளர்களுடன் கேரளாவுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையாகவும், சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் செல்லும் ஒருவழிப்பாதையாகவும் கம்பம்மெட்டு ரோடு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட இந்த ரோடு தமிழக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பில் இருந்து வருகிறது. கம்பத்திலிருந்து 13 கி.மீ  தூரத்தில் கேரளாவைச் சென்றடையும் கம்பம் மெட்டுரோடு, மேற்கு மலை அடிவாரப்பகுதியிலிருந்து 7 கி.மீ தூரம் கம்பம் மேற்கு வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியே செல்கிறது.

இதில் பல ஆபத்தான, அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த 2010ல் ரூ 2.87 கோடி செலவில் இந்த ரோடு செப்பனிடப்பட்டது. இந்நிலையில் தற்போது கம்பம்மெட்டு ரோட்டில் 5முதல் 9வது கி.மீ தூரம் வரை உள்ள ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று இருந்தது. இதனால் அங்கு புதிதாக ரோடு போடவேண்டும் என்று வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த 4 கி.மீ தூரத்திற்கு ரூபாய் 2.55 கோடி செலவில் புதிய ரோடு போடுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகேசன், உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணன், இளநிலை செயற்பொறியாளர் உதயகுமார் உடனிருந்தனர். கம்பம் மெட்டு ரோட்டில் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று முதல் காலை 8 மணி முதல் மாலை 4.30 வரை வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்