SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாதி, மதம் அற்றவரென சான்றிதழ் வழங்க வேண்டும் தாசில்தாரிடம் ஆவணஎழுத்தர் மனு

2/22/2019 1:37:11 AM

உத்தமபாளையம், பிப்.22:  சாதி, மதம் அற்றவர் என தனக்கு சான்றிதழ் வழங்கவேண்டும் என பண்ணைப்புரத்தை ஆவண எழுத்தர், உத்தமபாளையம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். தேனி மாவட்டம் பண்ணைப்புரம் 3வது வார்டு காந்திநகரை சேர்ந்தவர் காளியப்பன் மகன் பாப்பையா. இவர் டிகிரி முடித்துவிட்டு பத்திர எழுத்தராக உள்ளார். இவர் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணியிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளதார். அதில், எனக்கு சாதி, மதத்தில் நம்பிக்கை கிடையாது. நான் சாதி, மதமற்ற இந்தியனாகவே விரும்புகிறேன்.

இதுதான் எனது நீண்டநாளைய ஆசை. சாதி என்ற சொல்லினால் இன்றும் சமுதாயத்தில் ஏற்றதாழ்வு மற்றும் வறுமை என்ற போர்வையில் நாடு பல இன்னல்களை சந்தித்து வருகிறது. எனவே எனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கிடவேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார். இவரது கோரிக்கை மனுவுடன் சமீபத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சிநேகா என்பவர் சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வாங்கினார். இதனை இணைத்து இதேபோல் வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்