SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.2 ஆயிரம் நிவாரணத்திற்காக அலைமோதும் மக்கள் கூட்டம் வறுமையால் வாடுபவர்களுக்கு கிடைக்குமா?

2/22/2019 1:37:03 AM

சின்னமனூர், பிப். 22:  தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை பெற விண்ணப்பங்களுடன் மாவட்டம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. உண்மையிலேயே வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலின் 2003-04 ம் ஆண்டின் கணக்குப்படி எடுத்த அடிப்படையில் 60 லட்சம் பேர்கள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட 60 தொழில் செய்பவர்களின் பட்டியலும் இதில் அடங்கும். இந்த நிலையில் முதற்கட்டமாக ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்ததின் அடிப்படையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பலரும் மாவட்டம் முழுவதும் நகராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியங்களிலும், பேருராட்சிகளிலும் அதற்கான உரிய விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்கும் நிலையில் உள்ளனர்.

அதனால், தேனி மாவட்டம் முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்கள் அலுவலகளில் திரண்டு வரிசையாக காத்துக்கிடந்து மற்ற வேலைகளை விட்டு இந்த சந்தர்ப்பத்தை விட்டால் கிடைக்காது என்ற நிலையில் அலைந்து திரிந்து வருகின்றனர். அதனால் அனைத்து சேவை மையங்களிலும் ஜெராக்ஸ் கடைகளிலும் கூட்டம் அலை மோதி வருகிறது. சின்னமனூர் நகராட்சி, போடி நகராட்சி, கூடலூர் நகராட்சி, தேனி நகராட்சி, பெரியகுளம் நகராட்சி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய 4 வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 138 கிராம ஊராட்சிகளிலும் 2000 நிவாரண தொகை பெறுவதற்காக மனுக்களுடன் கூட்டம் அலை மோதி வருவதால் மாவட்டமே கல கலத்துள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் என அறிவித்திருப்பதால் பாகுபாடு எதுவும் இல்லாமல் வசதி படைத்தவர்கள், வசதி இல்லாதவர்கள் என்ற  அனைவரும் மனு செய்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் உண்மை தன்மை ஆய்வு செய்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்வர்களின் பட்டியலை கண்டுபிடித்து வழங்கினால் வறுமைநிலையில் உள்ள மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்