SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதியில் கொட்டை முந்திரியில் மாவுப்பூச்சி தாக்குதல் விலையும் வீழ்ந்ததால் விவசாயிகள் கவலை

2/22/2019 1:36:53 AM

ஆண்டிபட்டி, பிப்.22:  ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொட்டை முந்திரியின் விலை வீழ்ச்சியாலும்  மாவுப்பூச்சி தாக்குதலினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்நகரை சுற்றி கண்டமனூர், ஜி.உசிலம்பட்டி,எரதிமக்காள்பட்டி, ஒக்கரை பட்டி, ராஜதானி, கணேசபுரம், தெப்பம்பட்டி, பாலக்கோம்பை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கொட்டை முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முந்திரி கொட்டை சீசன் என்பதால் அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால், முந்திரி மரத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளதால் மகசூல் குறைந்துள்ளது. அறுவடை செய்து கொட்டை முந்திரியை லாரிகள் மூலமாக கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள். ஆனால், மாவுப்பூச்சி தாக்கத்தினால் முந்திரி விளைச்சல் பாதிப்படைந்துள்ளது மட்டுமின்றி விலை வீழ்ச்சியும் அடைந்துள்ளது. சென்ற ஆண்டு ஒரு கிலோ ரூ.155 க்கு மேல் விற்பனையானது.

நேற்றைய விலை ஒரு கிலோ ரூ.110 க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி கிருஷ்ணன் கூறுகையில், `` இந்த ஆண்டு கார்த்திகை,மார்கழி, தை மாதங்களில் எதிர்பார்த்த மழை பெய்யும் என்று முந்திரி சாகுபடி செய்தவர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் முந்தரி பூ எடுக்கும் நேரத்தில் மழைப்பொழிவு இல்லாததால் வெப்பத்தின் தாக்கத்தினால் பூக்கள் உதிர்ந்தது மட்டுமின்றி தப்பிய முந்திரியில் மாவு பூச்சிகளின் தாக்கத்தினால் விளைச்சல் குறைந்தது. இதனால் இந்த ஆண்டு எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு கடன் மட்டுமே மிச்சம். எனவே, அரசு  விவசாயிகளுக்கு வழங்கப்படும் முந்திரி கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும்’’  என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்