SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுவழியில் மக்கராகும் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகள் அவதி

2/22/2019 1:36:34 AM

வருசநாடு, பிப்.22:  கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்களில் ஏற்பட்டுள்ள பழுதை உடனடியாக சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. கடமலை - மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் விபத்துக்களில் சிக்குவோரையும், நோயால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைகளுக்கு விரைந்து அழைத்து செல்லவும் இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் இப்பகுதிமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாக இந்த ஆம்புலன்ஸ்கள் நடுவழியில் அடிக்கடி பழுதடைந்து நின்று விடுகின்றன. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி 108 ஆம்புலன்ஸ்களில் ஏற்பட்டுள்ள பழுதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அல்லது பழைய ஆம்புலன்ஸ்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய ஆம்புலன்ஸ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்