SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்கன்வாடி பணிக்கு நேர்முகத் தேர்வு

2/22/2019 1:29:16 AM

விருதுநகர், பிப்.22: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 20, 21, 22 ஆகிய தேதிகளில் நேர்முகத்தேர்வு நடக்கிறது. இதன்மூலம் அங்கன்வாடிகளில் தற்போது காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் என 184 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேற்று காரியாபட்டி, ராஜபாளையம் ஊரகம், வெம்பகோட்டை, திருவில்லிபுத்தூர் பகுதிகளில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இன்று விருதுநகர் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்