SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழிவுநீர் தீவானது காட்டுப்பிள்ளையார்கோயில்

2/22/2019 1:29:11 AM

ராமநாதபுரம், பிப். 22: ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதியில் 10 நாட்களாக குளம்போல சாக்கடை கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளது. இதனால் ஊர் தீவுபோல் காட்சியளிக்கிறது. பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை அருகே காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விரிவுபடுத்தப்பட்ட பகுதி என்பதால் அனைத்து தேவைகளுக்கும் மக்கள் நான்கு தெருக்களை கடந்து டவுன் பகுதிக்கு வரவேண்டும். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவில் குளம்போல் சாக்கடை தேங்கி நிற்கிறது. பள்ளிகளுக்குச் செல்லும் வாகனங்கள் உள்ளே வர மறுக்கின்றன. இதனால் சிறுவர் முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அரை கி.மீ. தூரம் நடந்து பள்ளி செல்கின்றனர். காலை நேரத்தில் அதிகளவு கழிவுநீர் வெளியேறி வீட்டின் வாசல் வரை வந்து விடுவதாக கூறுகின்றனர்.

ரோட்டின் நடுவே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நான்குபுறமும் கழிவுநீர் தேங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் செங்கல் பாலம் அமைத்து நடந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டின் பின்புறம் சென்று இரண்டு தெருக்கள் சுற்றி செல்வதாக தெரிவிக்கின்றனர். அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய ஊழியர்கள் வருவதில்லை. இதனால் சாக்கடை தேங்கி துர்நாற்றம் தாங்க முடியாமல் பலர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். மக்கள் குடியிருக்க முடியாத பகுதியாக நகராட்சியினர் மாற்றிவிட்டனர். உடைப்பை சரிசெய்யும் முன் நகராட்சி அதிகாரிகள் தெருவில் ஒருமுறை நடந்து செல்லட்டும் அப்போதுதான் எங்களின் கஷ்டம் புரியும். இரண்டு நாளில் சரி செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால் பத்து நாட்களாகி விட்டது நாளுக்கு நாள் அருகில் உள்ள தெருகளிலும் சாக்கடை ஓடுகிறது. கொசுக்கள் வராமல் இருக்கவும், துர்நாற்றம் குறையவும், பிளீச்சிங் பவுடர் போடலாம். கவுன்சிலர் போன்ற மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்தான் இது போன்ற அடிப்படை பிரச்னைகளை உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முடியும். எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

 • holifestivel

  வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

 • 20-03-2019

  20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்