SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜபாளையத்தில் தீ பிடித்து எரிந்த கரும்பு தோட்டம்

2/22/2019 1:28:37 AM

ராஜபாளையம், பிப்.22: ராஜபாளையத்தில் தோட்டத்தில் தீ பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குரும்புகள் எரிந்து நாசமானது.ராஜபாளையம் கருங்குளம் கண்மாய்க்கு உட்பட்ட பகுதியில் நெல் மற்றும் கரும்புகள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. இதில் தற்போது நெல் அறுவடை முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் கரும்புகளை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் திடீரென கரும்பு தோட்டத்திற்குள் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாய நிலங்களில் மின்சார வயர்கள் தாழ்வாக செல்வதால் மின் உராய்வு நடந்து தீ விபத்து ஏற்படுகிறது. பலமுறை மின்சார வாரியத்தில் எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளவில்லை. தற்போது லேசான காற்று அடிக்கும்போதே மின் வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பற்றியுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலை தோப்பு பகுதிகளில் தென்னை மட்டை மற்றும் மரக்கிளைகள் விழுவதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. எனவே விவசாய நிலங்களில் செல்லக்கூடிய மின் கம்பிகளுக்கு பதிலாக கேபிள் வயர்கள் அமைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்