SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

2/22/2019 1:27:44 AM

சாத்தூர், பிப்.22: சாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.சாத்தூரில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தூர் டவுன் எஸ்ஐ முனியாண்டி தலைமையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் படந்தால் ஜங்சன் அருகில் சங்கரேஸ்வரி காம்பவுண்டில் பணம் வைத்து சூதாடிய ஒ.மேட்டுபட்டியை சேர்ந்த பரமசிவம்(42), சாத்தூரை சேர்ந்த கணேசன்(45), பாபு(46), குருசாமி(53), பாண்டியன்(49), ராமமூர்த்தி(43) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சாத்தூர் குருலிங்காபுரம் சென்ட்ரல் எக்சேஞ்ச் பின்புறம் பணம் வைத்து சூதாடிய மேல ஒட்டம்பட்டியை சேர்ந்த குமார்(47), படந்தாலை சேர்ந்த காதர்மொய்தின்(67), மேடைராஜ்(29), பரமேஸ்வரன்(51) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்