SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1400 பேருக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் 2ஆக பிரிப்பு

2/22/2019 1:20:23 AM

நாமக்கல், பிப்.22: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, நாமக்கல் மாவட்டத்தில் 1,400 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், தற்போது 1,621 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 1,400 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடியை இரண்டாக பிரிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உடைய 5 வாக்குச்சாவடிகள், இரண்டு வாக்குச்சாவடிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,626 ஆக உயர்ந்துள்ளது. ராசிபுரம் வாக்குச்சாவடியில் புதிதாக 2 வாக்குச்சாவடியும், நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் தலா ஒரு வாக்குச்சாவடியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வாக்குச்சாவடிகள், ஏற்கனவே அமைந்துள்ள அதே பள்ளி வளாகத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. பொது வாக்குச்சாவடியாக இருந்தவை ஆண்கள், பெண்கள் என தனித்தனி வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி அருளரசு, டிஎஸ்பிக்கள் ராஜேந்திரன், ராஜூ, சப்கலெக்டர் கிராந்திகுமார்பதி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷேக்நவீத், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் தம்பிராஜா மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.







தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்