SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜவுளிக்கடை, பேக்கரியில் 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

2/22/2019 1:20:14 AM

நாமக்கல், பிப்.22: நாமக்கல்லில் 2வது நாளாக நகராட்சி அலுவலர்கள் நகரிலுள்ள ஜவுளிக்கடை, பேக்கரி கடைகளில் மேற்கொண்ட சோதனையில் 7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.நாமக்கல் நகராட்சி பகுதியில் நேற்று 2வது நாளாக ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரியில் நகராட்சி சுகாதார அலுலவர் பேச்சிமுத்து, ஆய்வாளர்கள் உதயக்குமார், செல்வராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டை ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் இருந்து 28 மூட்டை தடை செய்யப்பட்ட நான் ஓவன் கட்டை பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ₹2.50 லட்சமாகும்.இதேபோல், சூப்பர் மார்க்கெட்டுகள், பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இருந்து பிளாஸ்டிக் தட்டுகள், கேரிபேக்குகள், பிளாஸ்டிக் பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்  செய்யப்பட்டன. மொத்தம் 14 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில், 7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ₹42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ராசிபுரம்:  ராசிபுரம் நகராட்சி கமிஷனர் (பொ) நடேசன் உத்தரவின் பேரில்,  நகராட்சி பணியாளர்கள், நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை  பயன்பாட்டுக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து 10க்கும்  மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்திய நகராட்சி பணியாளர்கள், 100 கிலோ  தடை செய்யப்பட்ட பைகளை பறிமுதல் செய்ததுடன், கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹16  ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்