SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெவ்வெறு சம்பவங்களில் ஆசிரியர், டிரைவர் கொலை

2/22/2019 1:19:54 AM

திண்டுக்கல்/ செம்பட்டி, பிப். 22: ஒரேநாளில் வெவ்வேறு சம்பவங்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜீவா (35), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் சந்துக்கடையில் உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அருகிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஜீவா, ஒரு நபருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். போதை தலைக்கேறியதும் அந்நபர் ஜீவாவின் கழுத்தில் மிதித்து கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளியை தேடி வருகின்றனர். சின்னாளபட்டி அருகே என்.பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஜான்யாகப்பராஜ் (70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கும், இதே ஊரை சேர்ந்த புறா பாஸ்கர் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது மது போதையில் இருந்த புறா பாஸ்கர், ஜான்யாகப்பராஜை கீழே தள்ளினார். இதில் படுகாயமடைந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்யாகப்பராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிந்து புறா பாஸ்கரை கைது செய்தனர். இப்ப கொலைக்கும் ‘பேமஸ்’
திண்டுக்கல் பூட்டு, பிரியாணி, பூக்களுக்கு பேமஸ் என்பதுபோல் தற்போது கொலைகளுக்கு பேமஸாகி வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 4 கொலைகள் நடந்தன. இந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்கனவே 2 கொலைகள் நடந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 2 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்