SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான விதிகளை எளிமையாக்க வேண்டும்

2/22/2019 1:19:30 AM

நாமக்கல்,  பிப்.22: சென்னை  உயர்நீதிமன்ற  உத்தரவின்படி, பொது இடங்களில் விளம்பர தட்டிகள், டிஜிட்டல்  பேனர்கள்  வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பள்ளிபாளையம் நகராட்சி  அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், நகராட்சி கமிஷனர் இளவரசன்  பேசுகையில், ‘பள்ளிபாளையம் நகராட்சி எல்லைக்குள் டிஜிட்டல் பேனர்கள்,   விளம்பர தட்டிகள் வைக்க அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  விளம்பர பேனரில், கலெக்டர் வழங்கிய அனுமதி எண், தேதி, அனுமதி காலம்,  அனுமதிக்கப்பட்ட அளவு, அச்சகத்தின் பெயர் ஆகியவை அச்சிடப்பட வேண்டும்.  இந்த விதிமுறைகளை மீறும் விளம்பர பதாகைகள்,  முறையற்றவைகளாக கருதப்படும்.  விதிமுறை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,’ என்றார். அப்போது, அச்சகத்தின் விபரத்துடன் விளம்பர  பதாகை வைத்தவர்களுக்கே,  அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர் என தமிழர்  தேசிய  கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவன் தெரிவித்தார். ஒவ்வொரு பேனருக்கும்  அனுமதி பெறுவதற்கு கலெக்டர் அலுவலகத்துக்கு செல்வது நடைமுறை  சாத்தியமில்லை.  எனவே, பேனருக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு, நகராட்சி  நிர்வாகமே அனுமதி வழங்க  வேண்டுமென திமுக மாவட்ட பிரதிநிதி மாதேஷ் கோரிக்கை  விடுத்தார். பள்ளிபாளையம் நான்கு சாலை சந்திப்பில் ஒரு சில கட்சிகளே,  தொடர்ந்து மாற்றி  மாற்றி தட்டிகளை வைத்துக்கொள்கின்றனர். இதற்கு அனுமதி  பெறுவதே இல்லை என திராவிடர் விடுதலை கழகம் முத்துப்பாண்டியும், நடவடிக்கை  எடுத்தால் பாரபட்சமின்றி எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  செயலாளர் அசோகனும் புகார் தெரிவித்தனர். அவர்கது கோரிக்கைகள் கலெக்டரின்  கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.நாமக்கல்: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பிளக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் கூட்டம் நேற்று கமிஷனர் சுதா தலைமையில் நடந்தது. அரசின் உத்தரவுபடி நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ெதரிவத்தார். இந்த கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர்கள் செல்வம், முருகேசன், நகர திமுக பொறுப்பானர் ஆனந்த், அதிமுக தொகுதி செயலாளர் சேகர், சண்முகம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஷேக்நவீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் பொறுப்பு சுகுமார் தலைமையில், நகராட்சியில் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டு வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நகரமைப்பு அலுவலர் வேலாயுதம், நகர் நல அலுவலர் அரசகுமார், பிடிஓக்கள் டேவிட் அமல்ராஜ், பரமசிவம் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில், டிஜிட்டல் பேனர் வைத்தல் தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் செயல் அலுவலர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. அதேபோல், ராசிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்