SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு ஊழியர் வீட்டில் 4.5 பவுன் நகை திருட்டு

2/22/2019 1:17:17 AM

கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி தேன்மொழி(51). இவர் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி, இரவு 9 மணியளவில் தனது வீட்டை பூட்டி விட்டு, நாமக்கல்லில் உள்ள  தனது உறவினரின் இல்லத் திருமண விழாவிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மாலை, மீண்டும் கிருஷ்ணகிரிக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 4.5 பவுன் நகை திருடு போயிருந்தது.
 இதுகுறித்து தேன்மொழி, கிருஷ்ணகிரி போலீசில் புகார் தெரிவித்தார்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்