SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு.க.ஸ்டாலின் நாளை ஓசூர் வருகை; மாவட்ட செயலாளர் அழைப்பு

2/22/2019 1:17:05 AM

தேன்கனிக்கோட்டை, பிப்.22: நாளை ஒசூருக்கு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தளி தொகுதி எல்லையான பேளகொண்டப்பள்ளியில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது குறித்து மேற்கு மாவட்ட செயலாளர் தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் தொகுதியில், ஊராட்சிசபை கூட்டம், வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நாளை (23ம் தேதி) காலை, 10 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக ஓசூர் வரும் திமுக தலைவருக்கு, தளி தொகுதி எல்லையான பேளகொண்டப்பள்ளியில், காலை 8 மணியளவில் தளி தொகுதி திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.  
வரவேற்பு மேடையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அவர் சந்திக்க உள்ளதால் அனைவரும், வரிசையாக நின்று புத்தகங்கள், பொன்னாடை அணிவித்து வரவேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிகழ்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், விவசாய அணி, தொண்டரணி, இளைஞரணி, மகளிர் அணி, மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பு நிகழ்சியை சிறப்படைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்