SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதேஸ்வரன் கோயில் விழாவுக்கு நீர்திறப்பு ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

2/22/2019 1:14:41 AM

பென்னாகரம், பிப்.22: மாதேஸ்வரன் மலை கோயில் பயன்பாட்டிற்காக கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1800 கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெய்த மழையால் தமிழகத்திற்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதையடுத்து, 19.7.18ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது, ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மறுநாளே 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர், 9.8.18ம் தேதி 1.10 லட்சம் கனஅடியானது. 19.8.18ம் தேதி அதிகபட்சமாக விநாடிக்கு 2.20 லட்சம் கனஅடியாக இருந்தது. இதையடுத்து, நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. கர்நாடகாவில் மழை குறைந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும், 1.10.18ம் தேதி 13 ஆயிரம் கனஅடியாகவும், 1.11.18ம் தேதி 6 ஆயிரம் கனஅடியாகவும், 1.12.18ம் தேதி 5,100 கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்தது.
கடந்த 20ம் தேதி விநாடிக்கு 1300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து சற்று அதிகரித்ததால், காய்ந்து கிடந்த அருவிகளில் மிதமாக தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை கோயில் பகுதியில், மகா சிவராத்திரி விழாவையொட்டி தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1800 கனஅடியாக அதிகரித்தது. மெயினருவியில் புதுவெள்ளம் வந்ததால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘மாதேஸ்வரன் மலைக்கோயிலில் மாசி திருவிழாவிற்காக கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது,’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்