SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை 20,954 மாணவர்கள் எழுதுகின்றனர்

2/22/2019 1:14:30 AM

தர்மபுரி, பிப்.22: தர்மபுரி மாவட்டத்தில், மார்ச் 1ம் தேதி தொடங்கும் பிளஸ் 2 தேர்வை 20,954 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சென்னையில் இருந்து தர்மபுரிக்கு நேற்று வந்த வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம்தேதி தொடங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், இந்த தேர்வை 70 தேர்வு மையங்களில் 158 பள்ளிகளைச் சேர்ந்த 20,954 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 10,510 பேர், மாணவிகள் 10,44 பேர். பிளஸ்2 தேர்வுக்கான ஆயுத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று சென்னையில் இருந்து பிளஸ் 2 வினாத்தாள் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டது. தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகத்தில், வெப் கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிளஸ் 1 பொது தேர்வு, வரும் மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. 68 தேர்வு மையங்களில், 19,171 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் 9,366, மாணவிகள் 9,805 பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வுக்கான வினாத்தாள், நேற்று லாரி மூலம் தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு சிசிடிவி கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்