SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மணஅள்ளி கூட்ரோட்டில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

2/22/2019 1:14:03 AM

அரூர், பிப்.22: அரூர் அடுத்துள்ள ஜம்மணஅள்ளி கூட்ரோட்டில், விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் அடுத்துள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து, 4 கிமீ தொலைவில் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. ஜம்மணஅள்ளி கூட்ரோட்டில் இருந்து கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பிரிவு சாலை உள்ளது. சர்க்கரை ஆலை சாலையிலிருந்தும், ஜம்மணஅள்ளி சாலையிலிருந்தும் வரும்  வாகனங்கள் அடிக்கடி மோதி, விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது. இதனையடுத்து, சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜம்மணஅள்ளி சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. எனவே, ஜம்மணஅள்ளி சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்