SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

2/22/2019 1:08:06 AM

கும்மிடிப்பூண்டி, பிப்.22: திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று ஜனப்பன்சத்திரம் கூட்டுசாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு   மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன் வரவேற்றார். கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மாநில தகவல் தொழில் நுட்ப அணியின் இணை செயலாளர் சி. எச். சேகர், மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், கதிரவன், பரிமளம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராசன் ஜெ.மூர்த்தி முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஊராட்சிகளில் தோறும் கொடி ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். 23,24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் கழக தோழர்கள் கலந்து கொண்டு அதிக அளவில் வாக்காளர்களைக் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். விழா இறுதியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் ஜானகிராமன் ஆகியோர் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்