SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் அமைதி ஊர்வலம்

2/22/2019 1:04:18 AM

திருப்போரூர். பிப்.22 : திருப்போரூர் அரிமா சங்கத்தின் சார்பில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 44 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 44 ராணுவ வீரர்களுக்கு, திருப்போரூர் அரிமா சங்கம், எஸ்ஜெஎல் சமுதாயக் கல்லூரி, பாரத வித்யாலயா பள்ளி ஆகியவை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாரத வித்யாலயா பள்ளியில் இருந்து, திருப்போரூர் பஸ் நிலையம் வரை மாணவர்களின் அமைதி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த வீரர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் உள்பட  பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்