SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் படுகாயம்: போதை டிரைவர் கைது

2/22/2019 1:03:57 AM

பல்லாவரம், பிப். 22: குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தில் நேற்று காலை தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணித்த 5 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூரில் செயல்படும் தனியார் பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை, பள்ளி வேன் மூலம் தினமும் அழைத்து வந்து, வீட்டில் விடுவது வழக்கம். குன்றத்தூர் கரைமாநகர் பகுதியை சேர்ந்த அட்டண்டர் சித்ரா (55) என்பவர், மாணவர்களை கண்காணித்து பத்திரமாக அழைத்து செல்வார். இந்நிலையில், நேற்று காலை குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளான கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து கொண்டு வேன், பள்ளிக்கு புறப்பட்டது. அனகாபுத்தூரை சேர்ந்த டிரைவர் சதீஷ் (27), வேனை ஓட்டினார். தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில், தரப்பாக்கம் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதில் சிக்கிய மாணவ, மாணவிகள் அலறி கூச்சலிட்டனர்.  மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், ஓடி சென்று, வேன் இடிபாடுகளில் சிக்கிய அவர்களை மீட்டனர். அதில் படுகாயமடைந்த சித்ரா மற்றும் 5 மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்ற டிரைவர் சதீஷை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அப்போது, அவர் மது அருந்திவிட்டு போதையில் இருந்தது தெரிந்தது. தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சிக்கி இருந்த டிரைவர் சதீஷை கைது செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் சதீஷ் அதிகளவு போதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது.தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர். டிரைவர் போதையில் பள்ளி வேனை கவிழ்த்து, விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்