SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர்: செங்கல்பட்டில் பரபரப்பு

2/22/2019 1:03:44 AM

செங்கல்பட்டு, பிப்.22: செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், மேம்பாலம் அருகில் குளிப்பாக்கம் பகுதியில் 6 திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் ஆகியவை உள்ளன. இதன் அருகிலேயே, கடந்த 20 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதனால்,  பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது. இதையொட்டி, வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, குடிமகன்களால் கடும் தொல்லை ஏற்படுவதாகவும், எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் காங்கிரஸ், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, வணிகர் சங்கம் ஆகிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், டாஸ்மாக் கடை முன் திரண்டனர். அங்கு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும்  டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினார்.அப்போது, போலீசார் முன்னிலையில், டாஸ்மாக் கடையை  இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

பின்னர் அந்த கடையின் அருகிலேேய உள்ள பாரையும் இழுத்து பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் வணிக சங்க மாவட்ட செயலாளர் உத்திரகுமார், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதிமுக நகர செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் சுல்தான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் யூனிஸ், நகர தலைவர் சாகுல்ஹமீது உட்பட பலர் கலந்துகொண்டனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை இருந்தது. இங்கு வரும் குடிமகன்களால், இப்பகுதியில் விபத்துகள் அதிகரித்தன. திருமண மண்டபங்களுக்கு வருபவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றித்து பலமுறை முறையிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நாங்களே கடையை இழுத்து பூட்டினோம் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்