SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பு அடுத்தடுத்த வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

2/22/2019 1:03:25 AM

கூடுவாஞ்சேரி, பிப். 22: கூடுவாஞ்சேரியில் 2 வீடுகள் மீது அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, நந்திவரம், மேட்டு தெருவை சேர்ந்தவர்கள் சத்யா (31), பார்த்தசாரதி (30). பிரபல ரவுடிகள். நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மீது அடிதடி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர்களுக்கும். அதே பகுதியை சேர்ந்த சில கும்பலுக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சத்யா, பார்த்தசாரதி ஆகியோரின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் 2 பைக்குகளில் 4 பேர் வந்தனர். அக்கம்பக்கம் சுற்றி பார்த்த அவர்கள், திடீரென 2 பேரது வீடுகளின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். குண்டு வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்தது. இதில், வீடுகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சத்யா, பார்த்தசாரதி ஆகியோர் அடிதடி சம்பவங்களில் ஈடுபடுவதால், அவர்களின் எதிரிகள் யாராவது நாட்டு வெடிகுண்டு வீசி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து மேற்கண்ட 2 பேருக்கும், எதிர் கோஷ்டியாக இருப்பவர்கள் யார், இவர்களுடன் ஏற்கனவே மோதலில் ஈடுபட்டவர்கள் யார் என்ற பட்டியலை  தயாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, வெடிகுண்டு வீசிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்