SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் குளறுபடி பிடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு

2/22/2019 1:03:01 AM

ஸ்ரீபெரும்புதூர், பிப்.22: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் ரூ2000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைதொடர்ந்து, வறுமை கோட்டுக்கு கீழ்  உள்ளவர்களின் பெயர்களை ஆய்வு செய்து, தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த, பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், வசதி படைத்தவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பதாகவும், ஏழை மக்களின் பெயர்களை புறக்கணித்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பெயர் பட்டியலில் வசதி படைத்தவர்கள் பெயர்கள் உள்ளதை கண்டித்தும், விடுபட்டவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் பொடவூர் கிராம மக்கள்,  ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சமரசம் பேசினர்.

அப்போது, பொடவூர் கிராமத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. வசதி படைத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதனை மாற்றி புதிதாக பெயர் பட்டியலை தயார் செய்யவேண்டும் என கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு, இதுபற்றி மாவட்ட நிர்வகத்திடம் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பெரும்புதூர் ஒன்றியம் பொடவூர் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் பெரும்பாலன குடும்பத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். தற்போது வெளியான பட்டியலில் பொடவூர் ஊராட்சியில் வசதி உள்ளவர்களும், அதிமுக நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்