SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூண்டி ஒன்றிய திமுக ஊராட்சி சபை ஆரம்ப சுகாதாரநிலையம் இல்லாததால் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்கும் அவலம்

2/21/2019 6:39:09 AM

ஊத்துக்கோட்டை, பிப்.21: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு  ஒன்றியத்தில்  உள்ள திம்ம பூபாலபுரம், அரியத்தூர், வெள்ளாத்துக்கோட்டை   ஆகிய 3 ஊராட்சிகளில்  திமுக ஊராட்சி  சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டிகே.சந்திரசேகர்  தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி, துணைச்செயலாளர் குப்பன்,  மாவட்ட பிரதிநிதி கேசவன், சிவய்யா,  இளைஞரணி அணி அமைப்பாளர் தில்லைகுமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள் பாலசுப்பிரமணி, சீனிவாசன், சுப்பிரமணி  ஆகியோர்   வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம்,  மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் பொது மக்கள் கூறும்போது, அரியத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னை உள்ளது. பஸ் வசதி இல்லை, குளம் தூர் வார வேண்டும், நயப்பாக்கம் சிறுபாலம் உடைந்து விட்டது. அதை சீரமைக்க வேண்டும், குப்பைகளை எடுப்பது கிடையாது, கொஞ்சேரி பாளையத்தில் ரேஷன் கடை இல்லை என்று கூறினர்.திம்ம பூபாலபுரம் கிராமத்தில், மருத்துவ சிகிச்சை பெற 15 கி.மீ.தூரம் உள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டியுள்ளது, மேலும் கால்நடை மருத்துவமனையும்  வேண்டும், ஓட்டேரி கிராமத்தில் சாலை வசதி இல்லை, பெண்கள் பிரசவ நேரத்தில் உடனே மருத்துவமனை செல்ல முடியவில்லை, ஆப்புலன்சில் செல்லும் போதே பிரசவம் ஆகியுள்ளது எனவே சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சரமாரியாக புகார் கூறினர்.

வெள்ளாத்துக்கோட்டையில், மின்சார வசதி இல்லை, இருளர் குடியிருப்புகள் பழுதடைந்துள்ளது அதை சீரமைக்க வேண்டும், மயான வசதி வேண்டும்  என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்ட திமுகவினர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்