SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத்தில் இருந்து சென்னைக்கு வேன்களில் கடத்தி வந்த 5 டன் குட்கா பறிமுதல்

2/21/2019 6:38:33 AM

பூந்தமல்லி, பிப். 21: குஜராத்தில் இருந்து சென்னைக்கு 2 வேன்களில் கடத்தி வந்த சுமார் 5 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் டிரைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.  பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் பகுதியில் உள்ள சந்திப்பில் ஒரு வேனில் இருந்து மற்றொரு வேன் மற்றும் மினி லாரிக்கு குட்கா பொருட்கள் மாற்றப்படுவதாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 வேன் மற்றும் மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது 5 டன் எடையுள்ள 70 மூட்டை குட்கா மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேன் டிரைவர்கள் குஜராத்தை சேர்ந்த ஜோதிந்திர தேவ் (44), மிசான் பாவேஸ்தான் (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், குஜராத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து தமிழகம் முழுவதும் வினியோகம் செய்து வந்ததும், குடோனில் பதுக்கி வைத்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் வேன் அல்லது லாரியில் சுற்றி வந்து வேறு வாகனங்களில் மாற்றி விடுவதும் தெரிய வந்தது.இதை தொடர்ந்து, 2 வேன் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்