SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம் தாயை கத்தியால் குத்தி 11 சவரன் பறிப்பு

2/21/2019 6:38:20 AM

சென்னை, பிப். 21: தண்டையார்பேட்டை பகுதியில் செலவுக்கு பணம் தராத தாயை கத்தியால் குத்தி 11 சவரன் நகைகளை வக்கீல் பறித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீலிடம் விசாரித்து வருகின்றனர். தண்டையார்பேட்டை, கே.ஜி.கார்டனை சேர்ந்தவர் பங்கஜம்மாள் (55). இவரது மகன் மாரிமுத்து (31). உயர்நீதிமன்ற வக்கீல். கடந்த சில நாட்களாக மாரிமுத்து தனது தாயிடம் செலவுக்கு ₹5 லட்சம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை மாரிமுத்து தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது தாயின் வலது கையில் கத்தியால் பலமாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரது கழுத்தில் இருந்த 11 சவரன் நகையை பறித்து கொண்டு மாரிமுத்து தப்பி ஓடிவிட்டார். பங்கஜம்மாள் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் மாரிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்