SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுராந்தகம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை நிறைவேற்றக் கோரி கலெக்டரிடம் மனு

2/21/2019 6:36:57 AM

மதுராந்தகம், பிப்.21: மதுராந்தகம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, எம்எல்ஏ புகழேந்தி கலெக்டரிடம் மனுவை வழங்கினார்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில், திமுக எம்எல்ஏ புகழேந்தி, கட்சி நிர்வாகிகளுடன் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதில் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, விவசாய நிலப்பட்டா, தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு, குடிநீர், சாலை, தெரு விளக்கு வசதிகள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரும்படி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.இந்த மனுக்களை பெற்ற எம்எல்ஏ புகழேந்தி, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை சந்தித்து பேசுவேன் என உறுதியளித்தார். அதன்படி, பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை, கலெக்டர் பொன்னையாவிடம் அளித்தார். அப்போது, பொதுமக்கள் குறைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய
வேண்டும் என கேட்டு கொண்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்