SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து

2/21/2019 6:36:18 AM

கூடுவாஞ்சேரி, பிப் 21: கீரப்பாக்கம் பிரதான சாலையில் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்தது, அதில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். 6 பெண்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் நான்கு ரோடு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வரை கீரப்பாக்கம் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை குறுகலாக உள்ளது. இங்கு கடந்த மாதம் பாலப்பணி நடந்து வந்தது.இந்நிலையில், மாம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி வேன், 6 பெண்கள் உட்பட 11 ஊழியர்களை ஏற்றி கொண்டு நேற்று காலை, கீரப்பாக்கத்தில் இருந்து கண்டிகை வழியாக சென்று கொண்டிருந்தது. குறுகலாக உள்ள கீரப்பாக்கம் பிரதான சாலையில் வேன் சென்றபோது, எதிரே ஒரு டாரஸ் லாரி வேகமாக வந்தது. இதனால் டிரைவர், வேனை இடதுபுறமாக திருப்பினார். அப்போது, எதிர்பாராத விதமாக வேன் சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த ஊழியர்கள், அலறி கூச்சலிட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அங்கு வந்து வேனில் சிக்கி இருந்த அனைவரையும் மீட்டனர். இதில் 5பேர் படுகாயமடைந்தனர். அவர்களை, கண்டிகையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மற்ற 6 பெண்கள் லேசான காயங்களுடன் வீட்டுக்கு சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்