SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளர்ச்சி பணிகள் செய்ய முடியாமல் நிர்வாகம் திணறல் காஞ்சிபுரம் பெருநகராட்சியில் கோடிக் கணக்கில் வரி பாக்கி

2/21/2019 6:35:34 AM

காஞ்சிபுரம், பிப்.21: காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 30 சதவீதம் வரி மட்டுமே வசூல் நடந்திருப்பதால், கோடிக்கணக்கில் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால், வளர்ச்சிப்பணிகள் செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.காஞ்சிபுரம் பெருநகராட்சியின் 51 வார்டுகளில்  5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் . நகராட்சிக்கு, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்தும் குடிநீர், புதை வடிகால் வரி, சொத்து வரி ஆகியவற்றை செலுத்துவதன் மூலம் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.ஆனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகள் ஏராளமாக நிலுவையில் இருப்பதால், வளர்ச்சி பணிகளை தொடர முடியவில்லை. இதனால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதையொட்டி, நிலுவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஆட்டோக்கள் மூலம் பெருநகராட்சி நிர்வாகம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும், குறைந்த அளவே வரிவ
சூலானது.

இதைதொடா–்ந்து, நேற்று முதல் காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிகளவு வரி பாக்கி வைத்துள்ள கடைகளில் முதல்கட்டமாக குடிநீர் இணைப்பை துண்டிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதன் ஒரு பகுதியாக  காந்தி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையின் இணைப்பை துண்டிக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதையறிந்த கடை உரிமையாளர், ஒரு வாரத்தில் வரிகளை முழுமையாக செலுத்துவதாக உறுதியளித்தார். இதனால், ஊழியர்கள் திரும்பி சென்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு சொத்து வரியாக ₹2150 லட்சம், குடிநீர் வரி ₹ 737 லட்சம், புதை வடிகால் வரி ₹ 680 லட்சம், தொழில் வரியாக ₹273 லட்சம், இதர வரிகளாக ₹727 லட்சம் நிலுவையில் உள்ளது.

இந்த வரி பாக்கியால் பெருநகராட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.இதுபற்றி காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் (பொறுப்பு) மகேந்திரனிடம் கேட்டபோது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  கோடிக் கணக்கில் குடிநீர், புதை வடிகால், சொத்து, காலிமனை என வரிகள் நிலுவையில் உள்ளன. இதனால் வளர்ச்சி பணிகள் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்த வரிகளை வசூல் செய்வதற்காகவே, இணைப்புகளை துண்டிக்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. உடனடியாக பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை செலுத்தி நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்