SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதிகளை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தால் சிறை தண்டனை

2/21/2019 4:19:49 AM

நாமக்கல், பிப்.21: நாமக்கல் மாவட்டத்தில், விதிமுறையை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைக்க உத்தேசித்துள்ள தேதிக்கு 2 நாட்களுக்கு முன், கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும் இடம் தனியாருக்கு சொந்தமானதாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பட்டாதாரர், அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தடையின்மை சான்று பெற வேண்டும்.
நடைபாதை இல்லாத சாலைகளில், சாலையின் விளிம்பில் இருந்து 10 அடி இடைவெளி விட்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும். ஒரு சாலையில் நிறுவப்படும் டிஜிட்டல் பேனர்கள் அணைத்தும் ஒரே அளவில் இருக்க வேண்டும். சாலைகள் அல்லது நடைபாதைகளுக்கு குறுக்கே வைக்க கூடாது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலையோரங்கள், சாலை சந்திப்புகள், நினைவுச்சின்னங்கள், உருவச்சிலைகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் டிஜிட்டல் பேனர்கள் வைக்ககூடாது. 6 நாட்கள் மட்டுமே டிஜிட்டல் பேனர் வைத்துக்கொள்ளலாம்.
இந்த விதிமுறைகள் மீறி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் குறித்து, பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். விதிமுறை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ₹5000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்