SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்

2/21/2019 4:19:30 AM

திருச்செங்கோடு,  பிப்.21:  திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடந்தது. இந்த  கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி  எம்எல்ஏ கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  பிறந்த நாளான  மார்ச் 1ம் தேதி நாமக்கல் மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு  மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம்  அணிவிக்கப்படும். வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற உள்ள  வாக்குச்சாவடி சிறப்பு முகாமில் அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக  செயலாளர்கள், வாக்குச்சாவடி  முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை  கொண்டு பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல்  பணியினை சிறப்பாக மேற்கொள்வது.  மேலும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின்   பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக  கொண்டாடும் விதமாக அந்தந்த ஒன்றிய, நகர,  பேரூர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டங்கள்  நடத்தி, நலத்திட்ட உதவிகள்  வழங்க ேவண்டும். தவிர, ரத்ததான முகாம்கள், விளையாட்டு போட்டிகள்  நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்