SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் உழவர் சந்தையில் உணவுபொருளில் கலப்படம் கண்டுபிடிக்க அரங்கு திறப்பு

2/21/2019 4:19:22 AM

நாமக்கல்,  பிப்.21: உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க, நாமக்கல் உழவர்  சந்தையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில்,  உணவு பொருட்களில் கலப்படத்தை  கண்டுபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரங்கு அமைத்து, நாம் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் 22 வகையான  பொருட்களில் எப்படி கலப்படம் செய்யப்படுகிறது? கலப்படம்  செய்யப்பட்ட பொருட்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து, மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, நாமக்கல் உழவர்  சந்தையில் நேற்று அரங்கு  அமைக்கப்பட்டது. இந்த அரங்கு மூலம் பொதுமக்களுக்கு உணவு பொருட்களில்  கலப்படத்தை கண்டுபிடிப்பது குறித்து, செயல்விளக்கம் அளிக்கின்றனர். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர்  சந்தைகளில் இதுபோன்ற அரங்கு அமைக்கப்படும்.  சந்தேகப்படும்படியான கலப்பட பொருட்களை  யாரேனும் விற்பனை செய்தால், 94440 42223 என்ற எண்ணில் தகவல்  தெரிவிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்  புஷ்பராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிக பிரிவு துணை  இயக்குனர் சிதம்பரம், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கிருஷ்ண மூர்த்தி,  முருகன் மற்றும் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்