SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்நடை மருத்துவமனையில் ₹1.86 கோடியில் சிடி ஸ்கேன் வசதி

2/21/2019 4:19:09 AM

நாமக்கல்,  பிப்.21: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய  மருத்துவமனையில், நபார்டு நிதிஉதவி ₹1.86 கோடியில் சிடி ஸ்கேன்  அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காணொலி காட்சி மூலம் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
 நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் நடந்த விழாவில், கால்நடை மருத்துவ  கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொ) புருசோத்தமன் பேசுகையில், ‘ கால்நடை மருத்துவத்தில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதில்  மேற்கத்திய நாடுகளுக்கு இணையான வசதிகளை, நாமக்கல் கல்லூரி பெற்றுள்ளது,’  என்றார்.  விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர்  பொன்னுவேல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மோலாண்மைக்  குழு உறுப்பினர் விஜயன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் தினேஷ்,  கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சிகிச்சை துறை  தலைவர் இசக்கியல் நெப்போலியன், ஈனியல் துறை தலைவர் செல்வராஜூ, கால்நடை  மருத்துவ சிகிச்சை துறைத்தலைவர் விஜயகுமார், கால்நடை பொது சுகாதார மற்றும்  நோய் நிகழ்வாய்வியல் துறைத்தலைவர் செல்வராஜ், கால்நடை அறுவை சிகிச்சை  மற்றும் எக்ஸ்ரே துறைத்தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்