SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

சேந்தமங்கலம் வாரச்சந்தையில் புதியதாக கடைகள் கட்ட வியாபாரிகள் வலியுறுத்தல்

2/21/2019 4:18:40 AM

சேந்தமங்கலம், பிப்.21: சேந்தமங்கலம் வாரச்சந்தையின் ஒரு பகுதியில், ₹1.75 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. எஞ்சியுள்ள இடத்தில் சந்தைக்காக இரண்டு மேற்கூரை அமைத்து கடை கட்டியுள்ளனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இங்கு சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் சந்தையில் கடை வைத்து மளிகை பொருட்களை விற்பனை  செய்து வருகின்றனர். போதிய இடம் இருந்தும் சந்தையில் கூடுதலாக கடைகள் கட்டப்படவில்லை.
இதனால் திறந்தவெளியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சந்தையில் கழிப்பிட வசதி மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறை எதுவும் இல்லை. வாகனங்களை முறையாக நிறுத்தக்கூட இடமில்லை. இதனால் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கடை வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கூடுதலாக கடைகள் கட்டியும், ஏற்கனவே உள்ள கடைகளுக்கு மேற்கூரை அமைத்தும், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்