SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லிமலையில் சந்தன மரம் வெட்டி கடத்திய வாலிபர் கைது

2/21/2019 4:18:16 AM

சேந்தமங்கலம், பிப்.21: கொல்லிமலையில் தனியார் பள்ளி நிர்வாகியின் நிலத்தில் இருந்த  சந்தமன மரங்களை வெட்டி கடத்திய வாலிபரை கைது செய்த ேபாலீசார், ₹50 ஆயிரம் மதிப்பிலான சந்தனக் கட்டைகள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அய்யூர்நாடு பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் தர்மலிங்கம். அதே  பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய  நிலத்தில் 100க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு  முன், இவரது நிலத்தில் இருந்த சந்தன மரங்களை சிலர் வெட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து  தர்மலிங்கம் வாழவந்திநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ மணி  வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் பெரக்கரைநாடு  உள்பரப்பு பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் பழனிசாமி(30) என்பவர், தர்மலிங்கத்தின் நிலத்தில் இருந்த சந்தன  மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹50 ஆயிரம் மதிப்பிலான சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பைல்நாடு சின்னுசாமி என்பவரை தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்