SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்துவட்டி கொடுமை கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி புகார்

2/21/2019 4:18:06 AM

நாமக்கல், பிப்.21: ராசிபுரம் தாலுகா மூலக்காடு பகுதியை சேர்ந்த நில புரோக்கர் சுப்ரமணி. இவர் நேற்று தனது மனைவி வசந்தியுடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர்,  இருவரும் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில், கந்துவட்டிகாரரிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் எனக்கூறி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை  போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில்  புகார் மனு அளித்தனர். இதுகுறித்து சுப்பிமணி கூறுகையில், ‘ ராசிபுரத்தில் ஒருவரிடம் ₹70 ஆயிரம் கடன் வாங்கினோம். கடனை கட்டி விட்ட  நிலையில், தற்போது வட்டியுடன் ₹2 லட்சம் கேட்டு மிரட்டி வருகிறார்.  இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை  எடுத்து கந்துவட்டிக்காரரிடம் உள்ள எங்களது பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும்,’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்