SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் 3வது நாளாக ஸ்டிரைக்

2/21/2019 4:17:56 AM

நாமக்கல், பிப்.21: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 3வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கவேண்டும். தனியார் தொழில் தொடர்பு துறையை மத்திய அரசு ஊக்குவிப்பதை விடுத்து, பிஎஸ்என்எல் ஐ மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 நாட்களாக நாமக்கல்லில் 86 பேர், பரமத்திவேலுரில் 25 பேர், ராசிபுரத்தில் 52 பேர் மற்றும் திருச்செங்கோட்டில் 84 பேர் என 247 பிஎஸ்என்எல்  அலுவலர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மூன்றாவது நாளாக நேற்று, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த தொடர் ேவலை நிறுத்தத்தால் 3 ஆயிரம் சிம் கார்டுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்