SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

2/21/2019 4:17:47 AM

 நாமக்கல் நகராட்சியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பாலசுப்ரமணியம், கமிஷனராக பதவி வகித்து வந்தார். இவரை தொடர்ந்து நகராட்சிக்கு தனியாக  கமிஷனர்  நியமிக்கப்படவில்லை. நகராட்சி பொறியாளர் கமலநாதன், கூடுதலாக  கமஷனர் பொறுப்பை கவனித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நாமக்கல்  நகராட்சிக்கு கமிஷனர்  நியமிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே நாமக்கல் நகராட்சிக்கு, புதிய அலுவலகம் கட்டப்பட்டது. நாடாளுமன்ற  தேர்தலையொட்டி, அரசு துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல்  பணியாற்றிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி  கோபிச்செட்டி பாளையம் நகராட்சி கமிஷனராக இருந்த சுதா, நாமக்கல் நகராட்சி  கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முறைப்படி  பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழக  அரசு உத்தரவின் பேரில், நாமக்கல் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் தீவிர  நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகராட்சியில் நிலுவையில் உள்ள வரி இனங்கள்  வசூலிக்கப்படும்,’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்