SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜவுளிக்கடைகளில் திடீர் சோதனை 4 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

2/21/2019 4:17:14 AM

நாமக்கல், பிப்.21: நாமக்கல் நகரில் பிரபல ஜவுளிக்கடைகளில் ஆய்வு நடத்திய நகராட்சி அலுவலர்கள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 4 டன் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்காரர்களுக்கு ₹91 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் தடை செய்யப்பட்ட நான் ஓவன் கட்டை பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று, நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, ஆய்வாளர்கள் உதயக்குமார், செல்வராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள்,  நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது ஜவுளிக்கடைகளின் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட கட்டை பைகளை, நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் நாமக்கல் தூபன்குமாரசாமி தெருவில் உள்ள பல்வேறு வீடுகளில், வியாபாரிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேரிபேக்குகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை சுமார் 2 மணி நேரம், மொத்தம் 14 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் நான் ஓவன் கட்டை பைகள் மற்றும் கேரிபேக்குகள் என 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பைகள் மக்காத குப்பை ரகத்தை சேர்ந்தது. மறு சுழற்றி செய்தாலும் அதை பயன்படுத்த முடியாது. இதையடுத்து ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மொத்தம் ₹91 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த திடீர் சோதனையால் ஜவுளிக்கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்