SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூரில் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பிறந்த நாள் விழா

2/21/2019 4:16:05 AM

ஓசூர், பிப்.21:  ஓசூரில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் பிறந்த நாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
ஓசூர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி அகில இந்திய அமைப்பு செயலாளருமான கே.ஏ.மனோகரன் பிறந்த நாள் விழா, இன்று (21ம் தேதி)  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஓசூரில், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கே.ஏ.மனோகரனின் ஆதரவாளர்கள் சார்பில், மலை மீது அமைந்துள்ள சந்திர சூடேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியினர், ஐஎன்டியூசி சார்பில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு உணவு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், இன்று காலை அவரது பெற்றோரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். பிறகு கே.ஏ.பி. திருமண மண்டபத்திலும், அவரது இல்லத்திலும் தொண்டர்களுடன் எளிய முறையில் பிறந்த நாளை கொண்டாடுகிறார். கே.ஏ.மனோகரன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் சார்பில் ஓசூர் நகரில் பல்வேறு இடங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்