SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூப்பு அடிப்படையில் பொதுத்தேர்வு பணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சிஇஓவிடம் கோரிக்கை மனு

2/21/2019 4:15:31 AM

கிருஷ்ணகிரி, பிப்.21: கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முதன்மை கண்காணிப்பாளர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தாள் அலுவலர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர், அறைக் கண்காணிப்பாளர் ஆகிய பணிகள் முதுநிலையாசிரியர் பணி மூப்பு அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பறக்கும்படை அலுவலர் பணி முற்றிலும் முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மட்டுமே பணி முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து பணிகளும் 10 கி.மீ சுற்றளவில் உள்ள பள்ளிகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதய நோயாளிகள், கர்ப்பிணி ஆசிரியைகள் ஆகியோருக்கு தேர்வு பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின்படி, 10 அறைகளுக்கு ஒரு பறக்கும்படை அலுவலர் நியமிக்க வேண்டும். மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் முதுநிலை ஆசிரியர்களாக இருப்பின், அவர்கள் தேர்வுப் பணிகளில் இருந்து விலக்கு கோரினால் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பு செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட தலைமையிட செயலாளர் வேந்தன், மாவட்ட துணைத் தலைவர்கள் முருகன், செஞ்சி, மாவட்ட தணிக்கையாளர் லோகராஜா, மகளிரணி செயலாளர் உமா, மாவட்ட இணைச்செயலாளர் காளியப்பன், மாவட்ட பிரசார செயலாளர் சத்தியகுமார், கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் வீரபத்திரன், சிவப்பிரகாசம், சேட்டு, மாதேசன், செந்தில் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்